மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆலோசனைக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் இந்த நேற்று மாலை 6.00 மணியளவில் மட்டு காந்தி பூங்காவில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்போது சந்தேக நபர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்து காத்துக் கொண்டிருந்த பொது அங்கு மாறுவேடத்தில் இருந்த விசேட அதிரடிப்படையின் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அத்துடன் அவர் வியாபாரத்துக்காக எடுத்து வந்த 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.