Tuesday, April 22, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCID அதிகாரிகள் என கூறி ஒரு கோடி ரூபாவை பெற்ற நால்வர் கைது

CID அதிகாரிகள் என கூறி ஒரு கோடி ரூபாவை பெற்ற நால்வர் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் தோன்றி ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டு முறைப்பாட்டாளரிடம் இருந்த 12,000,000 ரூபா மற்றும் 3இ500 டொலர்களை சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் பணிபுரியும் இந்தியரின் கடவுச்சீட்டை சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவர்கள் குறித்த நபரை தொலைபேசியில் அழைத்து 3.5 கோடி ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த தொகை ஒ கோடி ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles