Tuesday, April 22, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் 4,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்

யாழில் 4,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்

யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்று 4,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன்போது ஓர் தேங்காய் 4,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் 1,000 ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன், அதில் ஒரு தேங்காய் 4,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles