குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைத்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த வழக்கின் நீதிமன்றத்தை தவிர்க்கும் பிரதிவாதி தொடர்பிலான விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டார்.