இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ‘மோல்டிவியன்ஸ் எயார்லைன்ஸ்’ ஆரம்பித்துள்ளது.
இதன்படி, மாலைதீவின் மாலே சர்வதேச விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான முதலாவது விமானம் நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானம் நேற்று இரவு 09.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இந்த விமானத்தை வரவேற்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விமான சேவையின் விமானம் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் கட்டுநாயக்க மற்றும் மாலைதீவுகளுக்கு இடையில் இயங்கும்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான இந்த விமான நிறுவனம், தனது முதல் முதல் விமானத்திற்கு ஏ.320 ஏர்பஸ் வகை விமானத்தை பயன்படுத்தியுள்ளது.