மீட்டியாகொட சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மீட்டியாகொட – லிஹினியாகல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் பல பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பிரதான சீடராக இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து நேற்று (24) தபாபிட்டிய, லிஹினியாகல, மீட்டியாகொட பிரதேசத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் 25.01.2021 அன்று மீட்டியாகொட சந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தரிது என்ற நபர் கூரிய ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரிடமிரந:து 06 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.