இந்தோனேசிய எரிமலையின் விளிம்பில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணொருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிந்துள்ளார்.
சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது.
அங்கு தனது கணவருடன் சுற்றுலா சென்ற அவர், ‘ப்ளூ ஃபயர்’ என்று அழைக்கப்படும் எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து எரிமலை பின்னணியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அவரை பல முறை எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாது அவ்விடத்தில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாக அவர்களின் சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டு மணித்தியால தேடலின் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.