Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் மீட்பு

சிவனொளிபாதமலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் மீட்பு

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் நேற்று காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக விசேட நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles