Friday, January 16, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருட்களுடன் கைதான கணக்காளர் தடுப்புக்காவலில்

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளர் தடுப்புக்காவலில்

நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று(23) கைதான குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை மேற்கண்டவாறு 05 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது கணக்களார் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரள கஞ்சா 4 கிராம் 540 மில்லி கிராம் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles