Sunday, May 4, 2025
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுமுதலிடத்தை பிடித்தார் சமரி அத்தபத்து

முதலிடத்தை பிடித்தார் சமரி அத்தபத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சூப்பர் துடுப்பாட்ட வீராங்கனையுமான சமரி அத்தபத்து, உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் திங்கட்கிழமை (22) புதுப்பிப்பின் படி, சமரி அத்தபத்து 773 போனஸ் புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சமரி துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

சமரி இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3,513 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் நடாலி சீவர் 764 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் லாரா வால்வார்ட் 718 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles