நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் MPகளுக்கு எரிபொருளை வழங்குமாறு சபாநாயகர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், பணத்தை பெற்றுக் கொண்டு எம்.பிகளுக்கு எரிபொருளை வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான எரிபொருள் தொகையை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு வழங்குமாறு CPCக்கு அறிவுறுத்தப்பட்டது.
எரிபொருள் நிரப்பும் போது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.