கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரிடம் 34 இலட்சம் ரூபா மோசடி செய்து சிறையில் உள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் இருந்து பெறப்பட்ட 34 இலட்சம் பணத்தில் 04 இலட்சம் பின்னர் அந்த நபருக்கு வழங்கப்பட்டதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த மோசடியின் உண்மையான தொகை 30 இலட்சம் ரூபா என இன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இது குறித்து நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து தமிதா மற்றும் அவரது கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.