அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதுடன், குறித்த பெண் அராலியில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண், புது வருட கொண்டாட்டத்திற்காக சகோதரி வீட்டுக்கு வந்திருந்த நிலையில் கணவனால் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்த சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.