அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக, அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.