Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு35 ஆடுகளை திருடிய நபர் கைது

35 ஆடுகளை திருடிய நபர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரம், மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு மந்தையில் இருவர் காவல் கடமையில் இருந்த போது திடீரென வந்த குழுவினர் காவல் கடமையில் இருந்த இருவரையும் தாக்கிவிட்டு 9 இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் பெறுமதியான 35 ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியபடுத்தியதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களவாடப்பட்ட ஆடுகளில் 15 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஆடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய வொலிரோ கெப் ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles