பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், வேன் சேதமடைந்துள்ளது.
பல கச்சேரிகளில் பங்குபற்றியமையால் ஏற்பட்ட அதீத களைப்பு காரணமாக அதே இசைக்குழுவின் கலைஞர் ஒருவர் வேனை ஓட்டிச் சென்ற நிலையில், உறங்கியதாலும் இந்த விபத்து நேர்ந்ததாக பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவினர் அத தெரணவிடம் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை பொலன்னறுவை ஓனேகம மெதமலுவ பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.