Friday, December 19, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ஆங் சான் சூகி வீட்டுக் காவலில்

ஆங் சான் சூகி வீட்டுக் காவலில்

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே அவரது பதவி பறிபோனது. இதனால் அங்கு மீண்டும் இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது.

மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆங் சான் சூகி மீது இராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது தொடர்பாக பல வழக்குகள் அந்த நாட்டின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles