பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு சென்ற பேருந்தொன்று எதிரே வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.