பாடசாலைகளில் பல்வேறு விடயங்களுக்காக பணம் அறவிடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கப்படாமையால் பெற்றோர்கள் பாடசாலைகளை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.