களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் இன்று (16) காலை அவரது அறையின் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 74 வயதுடைய நடியெஸ்டா பொட்னர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் பதினொரு மாதங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வந்த இந்தப் பெண், குறித்த உல்லாச விடுதியில் வாடகைக்கு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.