அரச செலவினங்களை கட்டுபடுத்தும் நோக்கில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.
அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தூர பிரதேசங்களில் இருந்து கடமைக்கு சமூகமளிக்கும் அதிகாரிகளை தற்காலிகமாக அருகில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்ற அனுமதி வழங்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு வழங்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.