Thursday, May 15, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையை பாராட்டிய IMF

இலங்கையை பாராட்டிய IMF

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினர் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமையிலிருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பில் IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

IMF வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இலங்கை அடைந்த வெற்றியை தொடர்ந்தும் ​பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles