அத்திமலை, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று (15) பிற்பகல் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலான, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.