கம்பளை – அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ஜாவத்த பிரதேசத்தை சேரந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விளையாடிக்கொண்டிருந்த போது, குறித்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்துள்ளார்.
பின்னர், காணாமல் போன சிறுவனைத் தேடிய போது, அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.