Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலி - அவரது தாய் மீது தாக்குதல்: சந்தேக நபர் உயிர்மாய்ப்பு

காதலி – அவரது தாய் மீது தாக்குதல்: சந்தேக நபர் உயிர்மாய்ப்பு

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் காதலி எனக்கூறப்படும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவர் மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில் யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles