Thursday, May 1, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது சிறுவனை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தபின் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்

கடந்த 9 ஆம் திகதி குற்றவெளியிலிருந்து கிரான் குளத்துக்கு வந்த மேற்படி சிறுவன், குறித்த மாணவியை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கொழும்பிலிருந்து மீண்டும் நேற்று ஊர் திரும்பிய நிலையில் அவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles