ரஷ்யாவினால் யுக்ரைன் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மெக்டொனல்ட்ஸ் நிரந்தரமாக ரஷ்யாவில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான மெக்டொனல்ட்ஸ் ரஷ்யாவில் உள்ள தமது உணவகங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக ரஷ்யா முழுவதும் வியாபித்திருந்த சுமார் 850 மெக்டொனல்ட்ஸ் உணவகங்கள் மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டன.
அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் முடிவைக் குறிக்கும் வகையில் 1990 ஆம் ஆண்டு மாஸ்கோவில் முதன்முதலில் மெக்டொனல்ட்ஸ் உணவகம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.