Tuesday, April 22, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் விடுதலை

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் விடுதலை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.

சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 ஆண் கைதிகளும் 11 பெண் கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் குறித்த கைதிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் உறவினர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்க முடியும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள விதிகள் மற்றும் முறையான சுகாதார நடைமுறைகளின் கீழ் உரிய பொருட்கள் கைதிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles