அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நேற்று (10) இரவு லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம், புலங்குளம், சமகிபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.