சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 7.5 இலட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
போதைப்பொருளை கிராண்ட்பாஸ் பகுதிக்கு எடுத்துச் சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் டுபாயில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெசல்வத்த தினுகவின் சீடன் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினுகவிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி, சந்தேகநபர் போதைப்பொருளை விநியோகஸ்தர்களிடம் வழங்கி பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.