Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்வி அமைச்சின் இணையத்தளம் முடக்கம் – சர்வதேசத்திடம் உதவி கோரல்

கல்வி அமைச்சின் இணையத்தளம் முடக்கம் – சர்வதேசத்திடம் உதவி கோரல்

இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி குறித்த இணையத்தளம் மீதான சைபர் தாக்குதல் உள்நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம் காண சர்வதேச உதவி கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

இது தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளம் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles