காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று(08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை குளியல் தொட்டிக்குள் குளிக்கவிட்டு தாய் ஆடைகளைக் கழுவிக்கொண்டிருந்த நிலையில் குழந்தை நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.