Saturday, March 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட சோதனை நடவடிக்கை: 16 பேர் கைது

விசேட சோதனை நடவடிக்கை: 16 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை, மீட்டியகொட, கெசல்வத்தை, ரத்கம, கல்கிஸ்ஸ மற்றும் அங்கொட ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 8 பேரையும், அவர்களுடன் பல்வேறு உறவுகளைக் கொண்டு குற்றங்களுக்கு ஆதரவாக இருந்த 8 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles