Wednesday, June 24, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 2 வயது சிறுவன் பலி

வாகன விபத்தில் 2 வயது சிறுவன் பலி

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியும், டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வயது சிறுவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக தாயார் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் வெல்லவாய, ஆனபல்லம பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவேன உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான சாரதியை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles