Wednesday, June 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு24 இந்திய மீனவர்கள் விடுதலை - ஒருவருக்கு சிறை

24 இந்திய மீனவர்கள் விடுதலை – ஒருவருக்கு சிறை

கடந்ந மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட 25 மீனவர்களில் 24 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 படுகுகளில் 1படகினை செலுத்திவந்த படகோட்டியான ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும் மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக்கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles