Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமது போதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி

மது போதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி

மாத்தறை வெலிகம பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் (02) கணவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரது மனைவியான குறித்த பெண் அவரை வீட்டின் முன்னால் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர் மனைவியைத் தாக்க முற்பட்ட நிலையில், மனைவி கணவனைக் கம்பத்தில் கட்டி வைத்து சில நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கணவர் மயக்கமடைந்த நிலையில் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles