Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசார்ஜாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நாட்டை வந்தடைந்தது

சார்ஜாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நாட்டை வந்தடைந்தது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பணியாளரான ஜயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சார்ஜா நகரில் நிலத்தடி மின் வயரிங் அமைப்பு மூலம் மின்சாரம் கசிந்து, மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, மத்துகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனது சகோதரர் மூலம் சார்ஜாவில் உள்ள ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தில் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்துள்ளார்.

கடந்த மார்ச் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து அதன் எதிரே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இதே போன்று இரண்டு எகிப்தியர்கள், பங்களாதேஷ் பிரஜை மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவரும் அந்த இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் இந்த பெண் குறித்து தகவல் அளித்ததையடுத்து, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அவரின் சடலம் டுபாயில் இருந்து இன்று (03) அதிகாலை 04.55 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், ஜெயமினியின் தாயார், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles