Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் கைவரிசை காட்டிய திருடன்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் கைவரிசை காட்டிய திருடன்

மட்டக்களப்பில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் நகரிலுள்ள தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தின் உள்ள உண்டியலை உடைத்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் தண்டவன்வெளியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் சம்பவதினமான சனிக்கிழமை (30) ஈஸ்டர் விசேட ஆராதனை இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் விசேட ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு முடிவுற்ற நிலையில் அங்கிருந்து பொலிஸார் வெளியேறிய பின்னர் தேவாலயத்தின் அருகில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதா சிலைக்கு அருகிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles