மட்டக்களப்பு – மாவடிஓடை ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய முஸ்தபா மகுமுது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று ஆற்றில் குளிக்கச்சென்றவேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆற்றில் கற்பாறைகளுக்குள் அடைந்திருந்த நிலையில் இவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.
திடீர்மரண விசாரணையதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.
அதையடுத்து பிரேத பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.