தாய் எயார்வேஸ் இலங்கையுடனான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளமை விசேட அம்சமாகும்.
அதன்படி தாய் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TG 307 என்ற விமானம் நேற்று (31) இரவு 11.55 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து தாய்லாந்து பிரஜைகள் உட்பட சுமார் 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெற்று வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.