Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிசெம்பர் வரை முட்டை விலை அதிகரிக்கப்படாது

டிசெம்பர் வரை முட்டை விலை அதிகரிக்கப்படாது

டிசெம்பர் மாதம் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அரசாங்கம் அதிகமான கோழிகளை இறக்குமதி செய்துள்ளது.

இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டைகளினதும் கோழிக் குஞ்சுகளினதும் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles