நிலையான தீர்வுகளை வழங்குவது சவாலாக இருக்கும் போது, மாற்றுத் தீர்வுகள் மூலம் கல்வி முறையைத் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களுக்குள் மலையக பாடசாலைகளுக்கு 2,535 ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மே மாதத்திற்குள் அந்த குழுவை இணைத்து அடிப்படை பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.