Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

அனுராதபுரம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பொலிஸின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​அவரிடமிருந்து 21 கிராம் 262 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பெறுமதி சுமார் 17 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் – தேவானம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அனுராதபுரம் நகரின் முன்னணி ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி என்பது தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் போதைப்பொருளை மொத்தமாக எடுத்துச் சென்று சிறியளவிலான போதைப்பொருள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles