Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில், பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 750 சதுர அடி விஸ்தீரணமுள்ள கல் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles