லுணுகம்வெஹர பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை இன்று (28) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‘இப்பா’ என்றழைக்கப்படும் கெலும் துஷார (32) என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.