Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 33 சதவீத சம்பள உயர்வை ஏற்க முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன இருப்பினும் அதனை ஏற்கமுடியாது எனவும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக உள்ளதாகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது.

பெருந்தோட்டக் கம்பனிகளால் சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எனினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

மேலும் சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு தொழில் அமைச்சர் ஒப்புகொண்டுள்ளார் எனவும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் ஜீவன் தொண்டமான குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles