Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டு11 ஆண்டுகளுக்கு பின்னர் பூட்டானை வீழ்த்திய இலங்கை கால்பந்தாட்ட அணி

11 ஆண்டுகளுக்கு பின்னர் பூட்டானை வீழ்த்திய இலங்கை கால்பந்தாட்ட அணி

இலங்கை கால்பந்து அணி 3 வருடங்களின் பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட வெற்றியை நேற்றைய தினம் பதிவு செய்தது.

11 ஆண்டுகளுக்குப் பின்னர் பூட்டானை 2-0 கோல்களில் இலங்கை அணி தோற்கடித்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷை 2-1 என்ற கோல்களால் தோற்கடித்த இலங்கை, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் கொழும்பு ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து போட்டியில் நேற்று இந்த வெற்றியை பதிவு செய்தது.

பூட்டான் கடைசியாக 2015ஆம் ஆண்டு கொழும்பு சுகததாச மைதானத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடி 1-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது.

2013ம் ஆண்டு இலங்கை அணி 5-2 என்ற கோல் கணக்கில் பூட்டானை வீழ்த்தியது.

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

45வது நிமிடத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த டிலோன் டி சில்வாவும், 54வது நிமிடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டை குடியுரிமை பெற்ற ஆலிவர் ஜேம்ஸ் கெல்லட்டும் கோல் அடித்தனர்.

இந்த போட்டியை காண சுமார் 7,000 பேர் வருகை தந்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles