தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி மூலம் 3,439 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா,கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி மூலம் 2,705 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 734 மில்லியன் ரூபா அதிகரிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.