Thursday, January 15, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமான முறையில் விலங்குகளை கொண்டு வந்த தம்பதி கைது

சட்டவிரோதமான முறையில் விலங்குகளை கொண்டு வந்த தம்பதி கைது

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த தம்பதி, 35 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் நேற்று (25) பிற்பகல் 04.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தட்டான், தவளை, மீன், அணில், ஆமை, பல்லிகள், வெள்ளெலி, ஒரு வகை புழு, எலி போன்றவற்றை காற்றோட்ட வசதியுடனான சிறிய பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து கொண்டு வந்துள்ளனர்.

விசாரணைகள் முடியும் வரை இந்த விலங்குகள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles