Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles